தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் - 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்! - passed

திருவண்ணாமலை: தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

By

Published : May 12, 2019, 7:50 AM IST

தமிழ்நாடு சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் சங்க மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், தமிழ்நாடு அரசு இடைநிலை கட்டளை நிறைவேற்றுனர்களை தமிழ்நாடு அமைச்சக பணியாளர்களாக சேர்த்துக்கொள்ள எவ்வித உத்தரவும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்தல், டி கிரேடில் இருந்து சி கிரேட் ஆக பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டும் - டி கிரேட் கடை நிலை ஊழியர்கள் பார்க்கும் பணியிலேயே தங்களை அமர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் செயற்குழு பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

7 தீர்மானங்கள் நிறைவேற்றம்

இச்செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிவில் நீதிமன்ற இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட துணைத் தலைவர், துணைச் செயலாளர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details