திருவண்ணாமலையில் உள்ள திருமஞ்சன கோபுரம் வீதியில் கதர் கிராமத் தொழில் மைய உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. 50 ஆண்டு பழமையான இக்கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததன. இந்நிலையில், கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று சரிந்து விழுந்தது.
திருவண்ணாமலையில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் சரிந்தது - காதி கிராப்ட்
திருவண்ணாமலை: புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இருந்த 50 ஆண்டு பழமையான காதி கிராப்ட் கட்டடம் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர்
இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கட்டடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று அறிய இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.