தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 50 பேர் கைது - ETV Bharat

திருவண்ணாமலை மாவட்டதில் கள்ளச்சாரயம் விற்பனை செய்த 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 50 பேர் கைது
திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 50 பேர் கைது

By

Published : Jun 17, 2021, 4:24 PM IST

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன் குமார் ரெட்டி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி மேற்பார்வையில், வேட்டவலம் காவல் ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து காட்டுமலையனூர் கிராமத்தில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தியாகி அண்ணாமலை நகரில் 110 லி கள்ளச்சாராயம்

அதேபோல் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து, தியாகி அண்ணாமலை நகரில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்பட்டது.

மேலும், மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து கிராமத்தில் நடத்திய கள்ளச்சாராய வேட்டையில் பதுக்கிவைக்கபட்டிருந்த கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

வெறையூர், சின்னகல்லப்பட்டியில் 65 லி கள்ளச்சாராயம்

திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K. அண்ணாதுரை மேற்பார்வையில், வெறையூர் சின்னகல்லப்பட்டி கிராமத்தில் நடத்திய கள்ளச்சாராய வேட்டையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 65 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் போளூர், கலசப்பாக்கம், ஜமுணாமரத்தூர், வானாபுரம், ஆரணி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாளாகளாக காவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

4,520 லி கள்ளச்சாராய ஊழல் அழிக்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் சுமார் 4,520 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் 1,636 லிட்டர் கள்ளசாராயம் கைப்பற்றப்பட்டது.

113 நபர்கள் மீது வழக்குப்பதிவு

இதுதொடர்பாக 113 பேர் மீது, 121 வழக்குகள் பதிவு செய்யட்டு, 50 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:உண்டியல் உடைத்து பணம் திருடிய 2 சிறுவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details