தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல இடங்களிலிருந்து 3400 லிட்டர் கள்ளச்சாராயம்... வளைத்துப் பிடித்த காவல்துறை! - 25 sellers arrested in tiruvannamalai

திருவண்ணாமலை: மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து 3,400 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையில் தேடுதல் வேட்டையில் கைப்பற்றினர்.

கள்ளச்சாராயம், illicit liquor
கள்ளச்சாராயம்

By

Published : May 16, 2020, 9:44 PM IST

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, காவல் துறையினர் இணைந்து நடத்திய மது விலக்கு தேடுதல் வேட்டையில், ஆரணி தாலுகா இருளம்பாறை பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரம்பட்டு பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், போளூர் தாலுக்கா கோரமடுவு பகுதியில் 1400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

மேலும், கலசபாக்கம் தாலுக்கா கீழ்வண்ணியனூர் பகுதியில் 30 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த ரவிச்சந்திரன், போளூர் தாலுக்கா வசந்தபுரம் பகுதியில் 170 லிட்டர் வைத்திருந்த சத்தியராமன், மல்லிகாபுரம் பகுதியில் 60 லிட்டர் வைத்திருந்த ரஞ்சித், இருளம்பாறை பகுதியில் 65 லிட்டர் வைத்திருந்த மாதவன், பெருமாள்பேட்டை பகுதியில் 20 லிட்டர் வைத்திருந்த முருகன், நொளம்பை பகுதியில் 115லிட்டர் வைத்திருந்த சுரேஷ், விஜி ஆகியோரை கைது செய்து கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றினர்.

கள்ளச்சாராயம்

பாச்சல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாச்சல் பகுதியில் 20 லிட்டர் வைத்திருந்த பழனி, சுரேஷ், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா விஜயநகரம் பகுதியில் 110 லிட்டர் வைத்திருந்த குமார், மணிகண்டன், பல்லம் பகுதியில் 150 லிட்டர் வைத்திருந்த சுமதி, ராஜேஸ்வரி, வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பூர் பகுதியில் 10 லிட்டர் வைத்திருந்த அழகேசன், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா நாரையூர் பகுதியில் 55 லிட்டர் வைத்திருந்த குப்பன், சேத்பட் தாலுகா மன்சுராபாத் பகுதியில் 110லிட்டர் வைத்திருந்த சிவகுமார், ராஜ்குமார் ஆகியோரையும் கைது செய்தனர்.

மேலும், திருவண்ணாமலை தாலுக்கா மேல்சடையனோடை பகுதியில் 10 லிட்டர் வைத்திருந்த குமார், சமுத்திரம் காலனி பகுதியில் 55 லிட்டர் விற்பனைக்காக வைத்திருந்த ஜான்சி, வெங்கடேஸ்வரி, கலைவாணி, மோரணம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஏனந்தவாடி பகுதியில் 110 லிட்டர் வைத்திருந்த ரமேஷ், நவீன் குமார், பெரணமல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவனியாபுரம் பகுதியில் 15 லிட்டர் வைத்திருந்த தசரதன், நம்பேடு பகுதியில் 15 லிட்டர் வைத்திருந்த குமார், உள்ளிட்ட 25 பேரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

கள்ளச்சாராயம்

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேம்பட்ட விசாரணையை காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details