தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் பலி! - School students drowned in the lake

திருவண்ணாமலை அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 17, 2022, 4:26 PM IST

திருவண்ணாமலை:கலசப்பாக்கம் தாலுகா லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணதாசன். இவரது மகன்கள் லாடவரம் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அருள், சந்திப், ஹரிகிருஷ்ணன் மகன் ஜீவன்குமார் ஆகிய 3 பேரும் அப்பகுதியிலுள்ள கங்கநல்லூர் ஏரியினுள் நேற்று மாலை குளிக்கச் சென்றுள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஏரியின் ஆழமான பகுதியில் மூழ்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனிடையே, தங்களின் குழந்தைகளைக் காணவில்லை என தேடியநிலையில், ஏரியின் அருகே பள்ளி மாணவர்களின் சீருடை மட்டும் இருந்தது. ஆனால், அங்கு யாரும் இல்லையென அப்பகுதியைச் சேர்ந்தவர் கூறியதையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சிறுவர்களை சடலமாக ஏரியிலிருந்து இன்று (டிச.17) மீட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சடலங்களை கைப்பற்றிய கலசப்பாக்கம் போலீசார் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details