தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலையில் 230 லிட்டர் கள்ளச்சாராயம், 178 மதுபாட்டில்கள் பறிமுதல் - கடத்தல்

சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த, 230 லிட்டர் கள்ளச்சாராயம், 178 மது பாட்டில்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் 7 பேரைக் கைதுசெய்தனர்.

liquor
liquor

By

Published : Oct 3, 2020, 11:09 PM IST

திருவண்ணாமலை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தின் உத்தரவுப்படி, மதுவிலக்கு காவல் துறையினர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது தானிப்பாடி பகுதியில், சட்டவிரோதமாக 180 மி.லி., அளவுள்ள 110 மதுபாட்டில்களைக் கடத்திய பிரபாகரன் (30), 68 மதுபாட்டில்களைக் கடத்திய சரவணன் (40), சங்கர் (54) ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அதேபோல, சோமாசிபாடி, மலப்பம்பாடி பகுதியில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த சக்திவேல் (21), ஜோதி (38) ஆகிய இருவரையும் கீழ்பென்னாத்தூர் காவலர்கள் கைதுசெய்தனர்.

அக்கரைப்பட்டி, நாராயணகுப்பம் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 120 லிட்டர் கள்ளச்சாராயம் வைத்திருந்த அழகேசன் (28), பிரகாஷ் (29) ஆகிய இருவரையும் தானிப்பாடி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மாவட்டத்தில் இன்று மட்டும் 7 பேர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தக் கடத்தலுக்குப் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல்செய்யப்பட்டன.

இதையும் படிங்க:அசாம் மாநில பெண் கூட்டு பாலியல் வழக்கு: மேலும் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details