திருவண்ணாமலை:ஆரணி தாண்டவராயன் தெருவை சேர்ந்த ஈஸ்வரி (60). இவர் ஆரணி டவுன் பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரி நேற்றிரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பும் போது அவர் வசிக்கும் தாண்டவராயன் தெருவில் இருசக்கர வாகனத்தில் ஈஸ்வரி சென்று கொண்டிருக்கும் போது 2 மர்ம நபர்கள் மற்றொரு இருசக்கர வாகனத்தில் முகத்தை மூடிக்கொண்டு பின்தொடர்ந்தனர்.
அந்த இருவரும் ஈஸ்வரி கழுத்தில் இருந்த 21 சவரன் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் நிலை தடுமாறிய ஈஸ்வரியை காப்பாற்றினர். இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இரண்டு மர்ம நபர்களை பிடிக்க முற்பட்டபோது மர்ம நபர்கள் பொதுமக்களிடம் சிக்காமல் தப்பிச் சென்றனர்.