தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் படுகொலை: பெண் கைது... நான்கு பேருக்கு வலைவீச்சு! - இளைஞர் படுகொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், புதுப்பட்டு கிராமத்தில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள்  வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் படுகொலை: பெண் கைது! நான்கு பேருக்கு வலைவீச்சு
இளைஞர் படுகொலை: பெண் கைது! நான்கு பேருக்கு வலைவீச்சு

By

Published : Nov 30, 2020, 10:40 PM IST

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி சத்யதேவி என்ற பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி, மப்பேடு அருகே சுங்குவார்சத்திரம் சாலையில் நாகராஜ், நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்களால், பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மப்பேடு காவல் துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் துரைபாண்டியன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ராஜா என்பவரின் மனைவி சத்யதேவியை, நாகராஜ் பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதுகுறித்து கணவர் ராஜாவிடம் சத்யதேவி தெரிவித்ததையடுத்து அவரது தூண்டுதலின்பெயரில், கணவர் ராஜா மற்றும் நான்கு நபர்கள் கொலை செய்தது உறுதியானது.

இதனையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த சத்யதேவி என்ற பெண்ணை மப்பேடு காவல் துறையினர் கைது செய்தனர். இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details