தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தட்டிக்கேட்டவரின் மண்டையை உடைத்த இளைஞர்கள் - வேகமான பயணம்

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்களை தட்டிக்கேட்ட இந்து முன்னனி நகரச் செயலாளர் மற்றும் அவரது சகோதரர் கடுமையாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

youngsters attacked  Hindu Front party secretary
youngsters attacked Hindu Front party secretary

By

Published : Jul 13, 2020, 12:51 PM IST

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் சூர்யா (23). இவர் திருவள்ளூர் நகர இந்து முன்னணி செயலாளராக உள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஜல்லிமேடு பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, ஐந்து இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் வேகமாக சீறிப் பாய்ந்து சென்றனர். இதைப் பார்த்த சூர்யா அவர்களை மெதுவாக ஓட்டிச் செல்லும் படியும், இங்கு குழந்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து சூர்யாவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த அவரது சகோதரர் சிவா என்பவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உருட்டுக்கட்டையால் தாக்கியதால் சிவாவுக்கு மண்டை உடைந்து 12 தையல்கள் போடப்பட்டன. சூர்யாவிற்கு தலையில் மூன்று தையல் போடப்பட்டன.

அவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சூர்யாவின் தாய் கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின்பேரில் மணவாளநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:’துப்பாக்கி கலாச்சாரத்தை திமுக செய்துவருகிறது’ - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details