திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த அஜித் (25) என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய தனது உறவினர் பெண்ணை நேற்றிரவு (ஜன. 2) கத்தியை காட்டி தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரும் வராத சூழலில், அஜித்திடமிருந்த கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அஜித் உயிரிழந்துள்ளார். பின்னர் சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி அந்த இளம்பெண் சரணடைந்துள்ளார்.