வயலில் நாற்று நடும்போது மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
திருவள்ளூர்: மின்னல் தாக்கியதில் வயல்வெளியில் நாற்று நட்டுக்கொண்டிருந்த இளம்பெண் கணவர் முன்பே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரை அடுத்த திருவூரை சேர்ந்தவர் பக்த ராஜன். இவரது மனைவி கோமளவள்ளி (35). இவர் இன்று (ஜூன் 1) பிற்பகல் திருவூரில் உள்ள வயல்வெளியில் கணவருடன் சேர்ந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அப்போது மின்னல் தாக்கியதில் கோமளவல்லி பலத்த காயமடைந்து கணவரின் கண் முன்பே உடல் கருகி பலியானார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கோமளவள்ளியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.