திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை அடுத்த நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் (40). இவருக்கும், இவரது மனைவி முனியம்மாளுக்கும் கருத்து வேறுபாட்டினால் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்தது.
முருகேசன் அடிக்கடி குடித்துவிட்டு முனியம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) முருகேசன் குடித்துவிட்டு மனைவி முனியம்மாளை அடித்திருக்கிறார்.