திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி 2021ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்குவது குறித்து என்.ஆர். தனபாலன் தலைமையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காமராஜரின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கட்சிகளுக்கு தக்கப் பாடம் புகட்டுவோம் - பெருந்தலைவர் மக்கள் கட்சி - parties that cheat by mentioning Kamaraj's name
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
காமராஜரின் பெயரை சொல்லி ஏமாற்றும் கட்சிகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் - பெருந்தலைவர் மக்கள் கட்சி
அப்போது பேசிய பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் தனபாலன், "அதிமுகவுடன் கூட்டணி தொடரும், காமராஜரின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் எதிர்க்கட்சிகளுக்கு தக்கப் பாடம் புகட்டுவோம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஐந்து சீட்டுக்கள் ஒதுக்க கோரிக்கையை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.