திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நேற்று (நவம்பர் 27) ஆட்சியர் பொன்னையா உத்தரவின்படி 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது நிறுத்தப்பட்டது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 2400 கன மில்லியன் நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தம் - boondi sathyamoorthy reservoir
திருவள்ளூர்: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட 3000 கன அடி தண்ணீர், முற்றிலும் நிறுத்தப்பட்டது.
reservoir
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஆற்றம் பாக்கம் பகுதியில் உள்ள தடுப்பு அணை நிரம்பி, அங்கிருந்து கடலில் கலக்கிறது. இதனிடையே தடுப்பணையில் உள்ள தண்ணீர், பாசன வசதிக்கு போதுமான அளவு இருப்பதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.