திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேல்நல்லாத்தூர் ஊராட்சி. ஒன்பது வார்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மற்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தன்னிச்சையாக செயல்படும் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வார்டு உறுப்பினர்கள் மனு! - தன்னிச்சையாக செயல்படும் தலைவர்
திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நல்லாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்களுடன் எவ்வித ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களையும் மேற்கொள்ளாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்து, சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளது, வார்டு உறுப்பினர்காளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.