புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ இரண்டாவது தெருவில் பாலாஜி என்பவருடைய இடத்தில் புதியதாக வீடு கட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரிகளான ராமு, ராஜா ஆகிய இருவர் வேலைக்கு கூலி ஆட்களை பணியில் அமர்த்தி கட்டுமான பணிகள் செய்து வருகின்றனர்.
அவரிகளிடம் திருமுல்லைவாயல் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமாரவேல் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி(32) என்ற மனைவியும், கௌசிகா, சுருதி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.