திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வெற்றி செல்வியை ஆதரித்து, திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ’ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி இலவச கல்வியை எந்த அரசும் கொடுக்காது என்றும் அது நாம் தமிழர் கட்சியால் மட்டமே சாத்தியமாகும் என்றும் உறுதியாக கூறினார்.