பேரம்பாக்கம் அடுத்த பாகசாலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு தெரு குழாய் மூலமாகக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், மூன்று மாத காலமாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு! ஆட்சியரகம் முற்றுகை - thirvallur collectorate
திருவள்ளூர்: பாகசாலை கிராமத்தில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராமப் பெண்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் காலிக்குடங்களுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து திரும்பிச் சென்றார்.