திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், அவரவர் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது, வரை அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். 2006 ஆம் ஆண்டே தேர்தலில் தனித்து போட்டியிட்டுள்ளதால், வரவுள்ள தேர்தலில் தனித்துப் போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரைக்கு வருவார்.