கத்திரி வெயில் தொடங்கி முதல் நாளான இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வெயிலின் தாக்கம் 111 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் இன்று முதல் அதிகமாகியுள்ள நிலையில், விடுமுறையில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைவரும் வெளியே வர முடியாத நிலை உள்ளது.
காட்டுகாட்டுனு காட்டிய கத்திரி வெயில்! அதுக்காக மொத நாளே இப்படியா? - கத்திரி வெயில்
திருவள்ளூர்: கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளான இன்று திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர்
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோரங்களில் போடப்பட்டுள்ள நுங்கு, பழச்சாறு போன்ற குளிர்ச்சியான பொருட்களை அருந்திச் செல்கின்றனர்.