தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் தொல்லையால் செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து பெண் தற்கொலை - ஏரியில் குதித்து பெண் தற்கொலை

கடன் தொந்தரவு தாங்க முடியாமல், மனமுடைந்த பெண் செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பெண் தற்கொலை
பெண் தற்கொலை

By

Published : Jun 12, 2021, 11:37 PM IST

திருவள்ளூர்:செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டாவது மதகு அருகே பெண் சடலம் ஒன்று கிடப்பதாக குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பூந்தமல்லி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏரியில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக, உதவி ஆய்வாளர் அந்தோணி சகாய பரத் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் மதுரவாயல் அடுத்த வானகரம், ஜெயரம் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா (33) என்பது தெரியவந்தது.

இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும், கடன் வாங்கி வீடு கட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில், தன்னிடம் சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமலும், வீட்டையும் கட்ட முடியாமலும் ராதா கடும்சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற ராதா, தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா மாதா கோயில் - படையெடுக்கும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details