தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரமற்ற உணவு சமைத்து அளித்த கிச்சன் மேற்பார்வையாளர்கள் இருவர் கைது - தனியார் கல்லூரி விடுதி

திருவள்ளூரில் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு சமைத்து அளித்த, தனியார் கிச்சன் நிறுவன மேற்பார்வையாளர்கள் இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு
தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு

By

Published : Dec 19, 2021, 8:32 PM IST

திருவள்ளூர்:புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஃபாக்ஸ்கான் நிறுவன ஒப்பந்த பெண் தொழிலாளருக்கு அளிக்கப்பட்ட தரமான உணவு காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அதற்கு காரணமான தரமற்ற உணவு தயாரித்துக் கொடுத்த சக்தி கிச்சன் மேற்பார்வையாளர்கள் பிபின்(34), கவியரசு(32) ஆகிய இருவரை வெள்ளவேடு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து சக்தி கிச்சன் நிறுவனர் செந்தில்குமார், கல்லூரி மேலாளர் ஹேமப்பிரியா தலைமறைவாகி இருப்பதாகவும், சமையலர் முனுசாமி சபரிமலை ஐயப்பன் கோயில் சென்றிருப்பதாகவும், அவர்களை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Cheating case against PT Usha: பி.டி.உஷா மீது மோசடி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details