திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிகிருஷ்ணன். இவர் ஒரு லாரி ஓட்டுநர். இவரது மனைவி யுவராணி. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த நிலையில் முனிகிருஷ்ணன் வெங்கடாபுரம் கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஓட்நரான இவர் இரவு நேரங்களில் வேலைக்கு சென்று விடுவார். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய மாமனார் டில்லி பாபு, மகன் இல்லாத நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
மாமனாரின் பாலியல் தொந்தரவால் தூக்கிட்டு தற்கொலை செய்த மருமகள்! - திருத்தணி
திருவள்ளூர்: திருத்தணி அருகே மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து யுவராணி தனது கணவரிடம் கூறியபோது, தனது தந்தை மீது வீணாக பழிபோடாதே என்று முனிகிருஷ்ணன் மனைவியை கண்டித்திருக்கிறார். இந்த நிலையில் மாமனாரின் பாலியல் தொந்தரவு கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளான யுவராணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் சேகர் தலைமையிலான குழு , உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சந்தேகத்தின் பேரில் கணவர் முனிகிருஷ்ணன் மற்றும் மாமனார் டில்லி பாபு ஆகிய இருவரையும் அழைத்துவந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் இருவரும் தான் யுவராணியின் தற்கொலைக்கு முக்கிய காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததால், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.