திருவள்ளூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்ற வி.ஜி. ராஜேந்திரன் அத்தொகுதியிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, நுழைவுவாயிலில் உள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் வி ஜி ராஜேந்திரன் அண்ணா சிலைக்கு மரியாதை! இதையடுத்து அலுவலகத்திற்குள் சென்ற வி.ஜி. ராஜேந்திரன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் படங்களை சுவற்றில் மாட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் படங்களை சுவற்றில் மாட்டினார் மேலும் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானத்துடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி பூபதி உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சைக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பரிவர்த்தனை செய்யலாம்!