திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையத்துக்கு தமிழ்நாட்டின் வடக்குப்பகுதியில் இருந்து தினந்தோறும் சுமார் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்தை ஆவடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் இல்லாமல் தவிக்கும் பேருந்து பயணிகள்- ஆவடியில் அவலம் - water problem
திருவள்ளுர்: ஆவடி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல் நகராட்சி அலுவலர்கள் அலட்சியம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியில்லை. இதனால் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் தண்ணீர் குடிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையறிந்துக் கொண்ட பேருந்து நிலைய வியாபாரிகள், அதிக விலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுக்குறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கோடை வெயிலின் தாக்கத்தில் ஏற்படும் தாகத்தை தீர்த்துக் கொள்ள நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.