தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் சிக்கிய கன்றுக்குட்டி: முதலுதவிக்கு ஏற்பாடு செய்த சுகாதாரத்துறை செயலாளர்! - திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர்: ஆய்வு பணியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சாலையில் விபத்தில் சிக்கிய கன்றுக்குட்டியை மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

விபத்தில் சிக்கிய கன்று குட்டியை மீட்ட சுகாதாரத்துறை செயலாளர்
விபத்தில் சிக்கிய கன்று குட்டியை மீட்ட சுகாதாரத்துறை செயலாளர்

By

Published : Jun 13, 2021, 5:12 PM IST

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடப் பணிகள் குறித்து பார்வையிட்டார்.

ஆய்வை முடித்துவிட்டு சென்னை திரும்பிக்கொண்டிருக்கும்போது, அவருடைய வாகனத்தில் கன்றுக்குட்டி ஒன்று விபத்தில் சிக்கியது.

கன்றுக்குட்டியை மீட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

உடனடியாக சுகாதாரத்துறைச் செயலாளர் கால்நடை மருத்துவமனையைத் தொடர்பு கொண்டார். பின்னர், அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கன்றுக்குட்டிக்கு முதலுதவி அளித்தனர்.

தொடர்ந்து, அதனை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய கரோனா தடுப்பு நெறிமுறை குறித்த காணொலி

ABOUT THE AUTHOR

...view details