தமிழ்நாட்டில் சிறைவாசிகள் புதிய வாழ்வைத் தொடங்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை அங்காடிகளின் வழியாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் சிறைத்துறை - இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து புழல் மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை, கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் ஏற்படுத்தன.