தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்க்கரை ஆலையில் காவலாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் !!! - thiruvallur

திருவள்ளூர்: திருத்தணி அருகே சர்க்கரை ஆலையில் தங்கள் மீது வீணாக பழி சுமத்துவதாக நிர்வாகத்தை கண்டித்து ஆலையின் காவலாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவலாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 12, 2019, 6:38 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த பல மாதங்களாக ஆலைக்கு சொந்தமான காப்பர் வயர் அடையாளம் தொியாத நபர்களால் திருடப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து ஆலய நிர்வாகத்தினர் காவலாளிகளிடம் விசாரித்தபோது அவர்கள் சிசிடிவி கேமராவை வைத்து கண்காணிக்கும்படி கூறியுள்ளனர்.

சர்க்கரை ஆலையில் காவலாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் சிசிடிவி கேமராவை முறையாக பராமரிக்காமல் விட்டதால் கேமராக்கள் பழுதடைந்துள்ளன.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் சர்க்கரை ஆலையின் காவலாளிகள் காப்பர் வயர்களை திருடுகிறார்கள் என திருவலங்காடு காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆலை காவலாளிகளை விசாரித்து வருகின்றனர்.

தற்போது இதைக் கண்டித்து சக்கரை ஆலை முன்பு ஆலையின் காவலாளிகள் 20க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தின்போது ஆலய நிர்வாகத்தினர் காவலாளிகள் மீது வீண் பழி சுமத்துவது நிறுத்த வேண்டும் எனவும் காவல் துறையினரிடம் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும் எனவும் பழுதடைந்து உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details