இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (நவ. 15) 9 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையிலிருந்து 950 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. அங்கு தொடர்ச்சியாக மழை பெய்தால் திறக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகட் தகவல் தெரிவக்கப்பட்டுள்ளது.
அம்மம்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர்: அம்மம்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை ஆறு, திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களைச் சேரந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ammapalli dam
இந்த தண்ணீரானது நகரி ஆற்றின் வழியாக பூண்டி அணை வரை வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அக்கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.