திருவள்ளூர்: பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் முறையான நடவடிக்கை எடுத்த எஸ்பி அரவிந்தனுக்கு தகவல் மற்றும் சட்ட முன்னணி அமைப்பினர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் முறையான நடவடிக்கை - திருவள்ளூர் எஸ்பிக்கு குவியும் பாராட்டுகள் - திருவள்ளூர் எஸ்பிக்கு குவியும் பாராட்டுகள்
அந்த பெண்ணை கொலை வழக்கில் இருந்து எஸ்பி அரவிந்தன் விடுவித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். இந்த நடவடிக்கை காரணமாக எஸ்பி அரவிந்தனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண், இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அவரது உறவினர் அஜீத் குமார் என்பவர் கத்தியை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது அந்த கத்தியால் அஜீத் குமாரை அப்பெண் குத்தி கொலை செய்தார். அந்த பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை செய்ததில், தற்காப்புக்காக நடந்த கொலை என நிரூபணமாகியுள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை கொலை வழக்கில் இருந்து எஸ்பி அரவிந்தன் விடுவித்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவர் முடிவெடுத்துள்ளார். இந்த நடவடிக்கை காரணமாக எஸ்பி அரவிந்தனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.இந்த நிலையில், தகவல் மற்றும் சட்ட முன்னணி அமைப்பினர் அவருக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.