தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டுகிறது.
அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இது குறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில், "நகராட்சி முழுவதும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்டுவருகின்றன.
பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.