திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு பகுதி திமுக மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கிருமி நாசினி டிராக்டர்களை சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.
இதனை அவரே முன்வந்து அப்பகுதி முழுவதும் தெளித்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ பரிசோதனைகளையும் தொடங்கிவைத்தார்.