இது குறித்து பேசிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், "தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் அனைவரும் கடை வீதிகளுக்கு சென்று புத்தாடைகளையும், அலங்காரப் பொருள்களையும் வாங்கிவந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு செல்லும்போது தங்கள் உடமைகளை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லவும், வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் பாதுகாத்துக் கொள்ளவும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்கிச் செல்லவும் வேண்டும் என மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பண்டிகை கால விடுமுறை நேரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் நபர்கள் தங்களது வீடுகளை பாதுகாத்திட வீட்டின் விவரத்தை அவரவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவியுங்கள்.