திருவள்ளூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உறுதிமொழி எடுங்க, மிஸ்டுகால் கொடுங்க, ஓட்டுப் போடுங்க, என்கின்ற தலைப்பில் வழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
உறுதிமொழி எடுங்க, மிஸ்டுகால் கொடுங்க, ஓட்டு போடுங்க - திருவள்ளூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - தேர்தல்2019
திருவள்ளூர்: அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள், தேர்தல் வாக்குச்சாவடி நிலைய ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வாக்குச்சாவடி மையம் ஊழியர்கள் உறுதி ஏற்றனர். உறுதிமொழி ஏற்றதும் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பயிற்சி மைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர். இதில் வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வாக்கு இயந்திரங்கள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கணினியில் முறையான இணையதள வசதி கூட இல்லாமல் பெயரளவுக்கு அதிகாரிகள் செயல்பட்டு வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவைகளை சரிசெய்ய உத்தரவிட்டார்.