திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பில், எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 100 விழுக்காடு பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் பருவமழை காலங்களில் மழைநீரைத் தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
குளத்தைத் தூர்வாரும் பணியை காவல் துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்தார்.