தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேசிய கீதம் இசைக்கும் போது போன் பேசிய முதன்மை கல்வி அலுவலர் - வீடியோ வைரல்! - Tiruvallur news today

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட அரசு பள்ளி நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 21, 2023, 7:26 AM IST

தேசிய கீதத்தை அவமதித்து போனில் பேசிய முதன்மை கல்வி அலுவலர் - பள்ளி நிகழ்ச்சியில் பரபரப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு பள்ளி நிகழ்ச்சியில் ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருக்க வேண்டிய முதன்மை கல்வி அலுவலர் தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களாக மாற்றும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி, நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளிகளில் மறு சுழற்சி செய்வதற்கான ஆணையை டிஸ்லரி மேலாளர் கணேசனிடம் வழங்கினார். மேலும் மாணவர்களின் பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறை விளக்கத்தையும் கேட்டறிந்தார்.

நிகழ்வு முடிவதற்குள் மாவட்ட ஆட்சியர் புறப்பட்டு சென்ற நிலையில் அரசு பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கான நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்து மாணவ மாணவியர்கள், அரசு அதிகாரிகள், நகராட்சி நிர்வாகிகள் என அனைவரும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக எழுந்து நின்று பாடினர். ஆனால், தேசிய கீதம் தொடங்கியது முதல் முதன்மை கல்வி அலுவலர் ராமன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கத்திற்கு உதாரணமாக இருக்க வேண்டிய திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் உரையாடி கொண்டிருந்த சம்பவம் மாணவர்கள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது.

சமீபத்தில் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தேசிய கீதத்தின் போது செல்போன் பேசிக் கொண்டு இருந்தது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:எங்களைப் போன்ற நிர்வாகத் திறமை உடையவர்களை தமிழ்நாடு மக்கள் அங்கீகரிக்க வேண்டும் - ஆளுநர் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details