திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் அதிக மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை காவல் துறையினர் திடீரென நேற்று காலை முதல் திருத்தணி சித்தூர் சாலையில் சோதனை நடத்தினர்.
அப்போது மணல் கடத்திக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்றது. அதனை பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர், லாரியை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து லாரியின் ஓட்டுநர் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றார்.