தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடி உள்ளிட்ட இருவர் கொடூரக் கொலை: மூவர் கைது! - thiruvallur murder case

திருவள்ளூர்: பண்னூர் அருகே ரவுடி உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

three arrested
three arrested

By

Published : Dec 23, 2019, 7:34 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ராயன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (எ) மார்க்கெட் ஜீவா (25). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர் கோபி (25) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்னூர் பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்தார்.

அப்போது, பின்தொடர்ந்து வந்த சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டி இருவரையும் கொலை செய்தனர். இது குறித்து, திருப்பந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் தங்கராசு அளித்த புகாரின்பேரில் மப்பேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், காவல் துணை கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் கிலார் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (24), தாமல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (22), வையாவூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (23) ஆகியோர்தான் இந்தக் கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

மூவர் கைது

காஞ்சிபுரத்தில் மறைந்த தாதா ஸ்ரீதரின் இடத்தைப் பிடிப்பதற்காக அவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்த தினேஷ், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகாசலம் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாகவே இந்தக் கொலைகள் நடந்திருப்பதாக மப்பேடு காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details