தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர்களை தேடி மருத்துவம் திட்டம்; திருவள்ளூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு! - ETV Bharat News

Ma Subramanian: மக்களைத் தேடி மருத்துவம் தொடர்ந்து, தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு பகுதியில் உள்ள ஹூண்டய் மோபிஸ் தனியார் தொழிற்சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Ma.Subramanian
தொழிலாளர்கள் தேடி மருத்துவ திட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 9:27 AM IST

தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம்

திருவள்ளூர்:தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் தொடங்கி நடைமுறையில் உள்ள நிலையில், தொழிலாளர்களின் உடல்நிலையை பாதுகாக்கும் வகையில், தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டத்தை நேற்று (ஜன.9) திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சேலம், திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், மதுரை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மருத்துவ மண்டலங்கள் உள்ளடக்கிய 711 தொழிற்சாலைகளில் பணியாற்றும் 8 லட்சத்து 53 ஆயிரத்து 90 தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக "தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய் பரிசோதனையானது தொழிலாளர்களுக்கு செய்யப்படவுள்ளது. இதில், ஒரு மாதத்தில் 8 லட்சம் தொழிலாளருக்கு இத்தகைய பரிசோதனையானது மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி!

தமிழ்நாடு முழுவதும் ஓராண்டில் 31,493 தொழிற்சாலைகளில் பணியாற்றும், 31 லட்சத்து 16 ஆயிரத்து 835 தொழிலாளர்களுக்கு ஓராண்டில் படிப்படியாக திட்டங்கள் விரிவுபடுத்தி, பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது செயலில் உள்ள மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை, கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி சாமணப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 வகையான தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவம் என்ற நோக்கத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் தற்போது வரை 1 கோடியே 69 ஆயிரத்து 713 பேர் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் முதல் பயனாளி, 50 லட்சமாவது பயனாளி, 1 கோடியே பயனாளியை ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து மருந்து பெட்டகம் வழங்கினார்.

அந்த வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தொழிலாளர்களைத் தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் 39 லட்சத்து 42 ஆயிரத்து 407 பேருக்கு, நீரிழிவு நோய் 27 லட்சத்து 55 ஆயிரத்து 155 பேர் என உள்ளிட்ட சிகிச்சைகளில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 60 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details