சிவகங்கை மாவட்டம் திருவேகம்புதூரில் கிராம உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்ம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் கிராம உதவியாளர் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கி அரசு வேலை வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.