தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் கொலை வழக்கு...இருவர் நீதிமன்றத்தில் ஆஜர் - கர்நாடக காவல்துறை

இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திகார் மற்றும் கர்நாடக சிறைகளில் உள்ள இவருர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட தலைவர்
திருவள்ளூர் மாவட்ட தலைவர்

By

Published : Sep 28, 2022, 2:20 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் மன்னூர்பேட்டையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஜா மொய்தீன் மற்றும் கர்நாடக மாநிலத்தில் அடைக்கப்பட்டிருந்த சாதிக் பாஷா ஆகிய இரண்டு பேரும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வராணி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீண்டும் வரும் 01.11.2022 அன்று மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் திகார் மற்றும் கர்நாடக சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க:சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை...போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details