திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ராம ரெட்டிபாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு புதிய அடுக்குமாடி கட்டடம் மற்றும் அடுக்குமாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. காட்டுப்பள்ளி எல் அண்ட் டி நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிதி உதவியுடன் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை தனித்தனி வகுப்பறைகள் மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் அடுக்குமாடி கழிப்பறைகள் கட்டப்பட்டன.
இந்த கட்டடங்களுக்கான திறப்பு விழா பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய வரவேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. இதில் பொன்னேரி உதவி காவல் துணை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி பள்ளியில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். எல் அண்ட் டி நிறுவனம் யூனிட் தலைவர் ஸ்ரீகாந்த் குல்கர்னி ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார்.