தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளூர், ரூ.2 லட்சம் குட்கா பறிமுதல் - thiruvallur latest crime news

திருவள்ளூர்: ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

thiruvallur police seizes 2 lakh worth banned gutka and arrested two
இரண்டு லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது!

By

Published : Feb 14, 2020, 9:06 AM IST

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது ஆரணியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை காவலர்கள் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, ஆன்ஸ் புகையிலை பொருட்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஆரணியை சேர்ந்த யுவராஜ், திலக்ராஜ் ஆகிய இரண்டு பேரை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கவரைப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது!

இதையும் படிங்க:கண்டெய்னரில் கடத்த முயன்ற 661 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details