கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பொது மக்களுக்கு பரவாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜி, பெண் தலைமைக் காவலர் சரஸ்வதி, ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த தயாநிதி, சிப்காட் காவல் நிலைய காவலர் அருணாசலம் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.