உலகத்தையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நீங்காத பிடியாக பிடித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 23) கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 156 நபர்களுக்கு இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 226. மேலும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்கள் ஆயிரத்து 470 பேர். மீதமுள்ள ஆயிரத்து 312 பேர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது . வேகமாக பரவிவரும் இந்த தொற்றை அரசு கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தொற்று பரவலை தடுக்க துய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட ஆகியோர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணியக்கோரியும் தேவையில்லாமல் கடைகளுக்கு வரக்கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:‘கரோனா விவகாரத்தை ஸ்டாலின் அரசியல் ஆக்கக்கூடாது’ - அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்