தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாய்தகராறில் கொலை செய்ய முயற்சிதவர்கள் கைது! - thiruvallur police

திருவள்ளூர்: திருமங்கலம் அருகே சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞரை கொல்ல முயற்சி செய்த வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாய்தகராறில் ஆள் வைத்து ஒருவரை கொலை செய்ய முயற்சிதவர்கள் கைது!

By

Published : May 5, 2019, 8:50 PM IST

சென்னை பாடியை சேர்ந்த பிரவீன்.(23) இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த சென்னை திருமங்கலம் என்.வி.என் நகரை சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டி சதீஷ் (20) என்பவர் பிரவீன் மீது மோதுவது போலதாறுமாறாக வந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதில் காயமடைந்த சதீஷ், அதே பகுதியைச் சேர்ந்ததன்னுடையநண்பரானஅசோக்(21) என்பவருக்குதொலைப்பேசி மூலமாக அழைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அசோக் மற்றும் அவர்கூட்டாளி ஒருவர், பட்டாகத்தியை எடுத்து காட்டி பரவீனை மிரட்டியுள்ளனர். கத்தியை கண்டதும் பயத்தில் பிரவீன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். இதனைக் கண்ட அந்த மூன்று நபர்கள்(அசோக் உட்பட) பட்டாகத்தியுடன் பிரவீனை நடுரோட்டில் துரத்தியுள்ளனர்.

சிறிது தூரம் சென்றவுடன் அங்கே வந்த மாநகர பேருந்தில் பிரவீன் ஏறி தப்பியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த மூவரும் பிரவீனின் இருசக்கர வாகனத்தை கற்களால் அடித்து நொறுக்கியுள்ளனர். பயந்து போன பிரிவீன் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் அந்த மூன்று நபர்களை பிடிக்க முற்பட்டப்போது மூவரும் தப்பியோடிவிட்டனர்.

தகராறில் ஆள் வைத்து ஒருவரை கொலை செய்ய முயற்சிதவர் கைது!

இது குறித்து பிரவீன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இன்று திருமங்கலம் பகுதியில் உள்ள பார் ஒன்றில்சதீஷ் மற்றும்அசோக்கை கைது செய்து, இருவரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர் மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மற்றொருவாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details