திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.இதில், இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கு வீடுகட்ட நிலம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும், வழக்கறிஞர்களுக்கு சேமநல நிதியை ரூ. 50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ரூ.5 லட்சம் பத்தாது.. ரூ.50 லட்சம் கொடுங்க..!-வழக்கறிஞர்கள் போராட்டம் - திருவள்ளூர்
திருவள்ளூர்: சேமநல நிதியை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
lawyers
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராஜராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் வழக்கறிஞர்கள் அனைத்து சங்க மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.