தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணை குறி வைத்த வழக்கறிஞர் - lawyer arrested

விவாகரத்து தொடர்பாக ஆலோசிக்க சென்ற பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து ஆடைகள் இன்றி படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வழக்கறிஞர் கைது
வழக்கறிஞர் கைது

By

Published : Jul 21, 2021, 12:34 PM IST

திருவள்ளூர்: மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். விவாகரத்து பெறுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் டார்ஜன் என்பவரை அந்த பெண் அணுகியுள்ளார்.

அப்போது வழக்கறிஞர் டார்ஜன் விவாகரத்திற்குத் தேவையான ஆவணங்களை தன் வீட்டிற்கு கொண்டுவரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் மணவாளநகரில் உள்ள வழக்கறிஞர் வீட்டிற்கு சென்றபோது குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதை அருந்திய சிறிது நேரத்தில் அந்தப் பெண் மயங்கியதாகவும், அப்போது வழக்கறிஞர் அவரை ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டி அந்தப் பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை வழக்கறிஞர் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து வழக்கறிஞர், உடந்தையாக இருந்த வழக்கறிஞரின் மனைவி ஆகியோர் மீது திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார்.

விசாரணையில் வழக்கறிஞர் ஆடைகள் இன்றி படம் எடுத்ததும், பணம் கேட்டு மிரட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று (ஜூலை 20) வழக்கறிஞர் டார்ஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:விவாகரத்து கேட்டு சென்ற பெண்ணுடன் குடும்பம் நடத்திய வழக்கறிஞர் வெட்டிக்கொலை

ABOUT THE AUTHOR

...view details