திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஆவடி மணவள நகர், திருவள்ளூர் ஏரிக்கரை ஆகிய பகுதிகளிலிருந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும், டெங்கு காய்ச்சல் பாதிப்படைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காய்ச்சலால் அல்லப்படும் திருவள்ளூர் மக்கள்! நோய் பாதிப்பு அதிகரிப்பு! - டெங்கு காய்ச்சல் பாதிப்பு
திருவள்ளூர்: மாவட்ட தலைமை மருத்துவமனையில் 40 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஐந்து பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில், டெங்கு காய்ச்சலுக்கு பூந்தமல்லியில் உள்ள பனிமலர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில தினங்களாக லட்சுமி நரசிம்மனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது.
உடல்நிலை மோசமாக இருந்ததால், உடனடியாக அவரை சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆவடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.