திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் கண்காணிப்பு நிலை குழுவினர் பொறுப்பு அலுவலர் சக்தி விநாயகமூர்த்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சி.டி.எச் சாலையில் ஐ.சி.சி, சிண்டிகேட், சி.எம்.எஸ் ஆகிய தனியார் வங்கி ஏடிஎம்களுக்கு பணம் நிரப்புவற்தாக மூன்று வாகனங்கள் வந்தது. அதனை மடக்கிய தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் - தேர்தல் பறக்கும் படை
திருவள்ளூர்: பூவிருந்தவல்லியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 89 லட்சம் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் சார் ஆட்சியர்
அந்த மூன்று வாகனத்தில் இருந்த மொத்த தொகையான 2 கோடியே 89 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாததால் பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி தேர்தல் உதவி அலுவலரும் வட்டாட்சியருமான புனிதவதியிடம் ஒப்படைத்தனர். அங்கு வருமான வரித்துறை அதிகாரிகளை வரவழைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் பறிமுதல் செய்த பணத்திற்கு ஆவணம் காண்பிக்கபடாததால் 2 கோடியே 89 லட்சத்தை கடைசியாக பூந்தமல்லியில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.